எரிபொருள் பெறுவதற்கு -இன்று முதல் டோக்கன்

வரிசையில் காத்திருக்கும் பொது மக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருளை விநியோகிப்பதற்காக இன்று முதல் டோக்கன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விசேடமாக தயாரிக்கப்பட்ட டோக்கன்கள் வழங்கப்படும் என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தற்போதுள்ள எரிபொருள் இருப்புக்களின் படி, அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் எரிபொருளை வழங்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொது போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் விநியோகம் இலங்கைப் போக்குவரத்து சபை டிப்போ ஊடாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நாட்டில் தற்போது 9 ஆயிரம் மெற்றிக் டொன் டீசல் இருப்பு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 92 ஒக்டேன் மற்றும் 95 ஒக்டேன் பெற்றோல் இரண்டும் 5 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் காணப்படுவதாக வலுசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் மண்ணெண்ணெய் விலையினை அதிகரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முறைகேடுகளை தடுப்பதற்கு தேவையான வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!