மே 9 வன்முறைகள் குறித்து ட்ரயல் அட் பார் விசாரணை- சபாநாயகர் கோரிக்கை!

மே 9 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற கறுப்புத் திங்கள் சம்பவம் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, மூன்று நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட் பார் அமர்வை நியமிக்குமாறு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
    
சட்டமா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட அமரகீர்த்தி அத்துகோரளை மீதான அனுதாப பிரேரணை, பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றிய உறுப்பினர்களில் பெரும்பாலானோர். இந்த படுகொலை தொடர்பில் ட்ரயல் அட்பார் நியமித்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!