நாட்டை முடக்கும் நிலை அல்ல!

எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதிக்குப் பின்னர் எரிபொருள் மற்றும் எரிவாயு கிடைக்கும் என்றும் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் தெரிவித்துள்ள சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இது நாட்டை முடக்கும் நிலை அல்ல என்று தெரிவித்தார்.
    
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இரவு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அமைச்சரவை இணைப் பேச்சாளரான அவர் குறிப்பிட்டார். இந்த காலகட்டத்தில் மக்களின் ஆதரவு தேவை என்றும் அமைச்சர் ஹரின் கூறினார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!