பஸ் போக்குவரத்து கட்டண திருத்தம் – போக்குவரத்து அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல் ..!

பஸ் போக்குவரத்து  கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்காக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் இன்று  விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

கலந்துரையாடலில் பங்கேற்குமாறு பஸ் தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து பொறுப்பு வாய்ந்த பிரிவினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி வெல்கம  தெரிவித்துள்ளார்

எவ்வாறாயினும், எரிபொருள் விலை அதிகரிப்புக்கு  ஏற்ப ஜுலை 01ஆம் திகதி முதல் அமுலாகும்  வகையில்  35 வீத கட்டண அதிகரிப்பு தேவைப்படுவதாக பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பஸ் போக்குவரத்து கட்டண திருத்தம் தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படாத நிலையில், இன்று முதல் பஸ் சேவையில் இருந்து விலகிசெயற்பட நேரிடும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்  உட்பட   பஸ் தொழிற்சங்கங்கள்  தெரிவித்துள்ளன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!