
ராணுவம், விமானப்படை, கடற்படை என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ஆள்தேர்வு நடைபெறுகிறது. விமானப்படைக்கான ஆள்தேர்வு பணி கடந்த 24-ந் தேதி தொடங்கியது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணையதளம், அன்று காலை 10 மணி முதல் செயல்பட தொடங்கியது. நேற்று காலை 10.30 மணி நிலவரப்படி, 94 ஆயிரத்து 281 பேர் விண்ணப்பித்துள்ளதாக ராணுவ அமைச்சக செய்தித்தொடர்பாளர் பாரத் பூஷண் பாபு தெரிவித்தார். விண்ணப்பம் செய்ய ஜூலை 5-ந் தேதி கடைசிநாள் ஆகும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!