அமெரிக்காவில் லொறி மீது மோதி தடம் புரண்ட ரயில்: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

அமெரிக்காவின் மிசோரி பகுதியில் ரயில் பாதை கடக்க முயன்ற சரக்கு லொறி மீது பயணிகள் ரயில் மோதி தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 3 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் இருந்து சிகாகோ நோக்கி சென்று கொண்டு இருந்த பயணிகள் ரயில், மிசோரி (Missouri) மாகாணத்தின் மெண்டன் பகுதிக்கு அருகில் உள்ள பொது ரயில் கடவு பாதையை கடக்க முற்பட்ட போது அங்கு வந்த சரக்கு லொறி மீது மோதி தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.
    
ரயிலில் தோராயமாக 12 ஊழியர்களுடன் சேர்த்து 243 பயணிகள் ரயில் பயணித்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள விபத்தில் பலர் படுகாயம் அடைந்து இருப்பதுடன் 3 பேர் இதுவரை இறந்து இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்த மூன்று பேரில் இரண்டு பேர் ரயில் பயணிகள் என்றும், ஒருவர் சரக்கு லொறியில் பயணித்தவர் என்றும் மிசோரி மாநில நெடுஞ்சாலை ரோந்து காவல்துறை பிரிவின் செய்தித் தொடர்பாளர் ஜஸ்டின் டன் செய்தியாளர்கள் விளக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விபத்தில் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து மிசோரி மாநில நெடுஞ்சாலை ரோந்து காவல்துறை அளித்த விளக்கத்தில், விபத்தில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற முழுவிவரம் தெரியவில்லை, ஆனால் இதுவரை மூன்று பேர் உயிரிழந்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளான பகுதிக்கு மீட்பு பணிகளுக்காக 8 மருத்துவ ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக லைஃப் லைட் ஈகிள் வணிக மேம்பாட்டு இயக்குனர் மாட் டாகெர்டி தெரிவித்துள்ளார்.

இதுத் தொடர்பாக அமெரிக்க ரயில் பயணிகள் நிறுவனம் தெரிவித்துள்ள அறிக்கையில், ரயில் உள்ளூர் நேரப்படி சரியாக 12:42pm மணிக்கு தடம் புரண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.
விபத்தி ஏற்பட்ட சம்பவ இடத்தில் உள்ளூர் அதிகாரிகள் தங்களது ரயில் பயணிகளுக்கான சேவையில் ஈடுபட்டு இருப்பதுடன், அவசரகால சேவை உதவியாளர்களை மீட்புப் பணி மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நண்பர்கள் உறவினர்களுக்கான ஆதரவு வழங்கும் பணிகளில் உட்படுத்தி இருப்பதாக சம்பந்தப்பட்ட ரயில் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!