கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் பணிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் ..!

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் பணிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பணிகள்  இன்று முதல் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை இவ்வாறு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட நீதிமன்ற பதிவாளர் நாயகத்தின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதன்படி, தடை உத்தரவு கோரி, அவசர வழக்குகள் தொடர்பாக தாக்கல்  செய்யப்படும் முறைப்பாடுகள் மற்றும் முன்மொழிவுகளை குறித்த நாளில் காலை 10 மணிக்குள் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த தினத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் நிலையில், அன்றைய தினம் காலை 10.30 இற்கு முன்னதாக அறிவித்தல் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.   

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!