300 முதலைகளை கொன்று குவித்த கும்பல்

மாட்டுக்கு புல் அறுக்கச்சென்றவரை முதலை கடித்து கொன்றதற்கு பழி தீர்க்கும் விதமாக முதலை பண்ணைக்குள் புகுந்த ஒரு கும்பல் சுமார் 300 முதலைகளை கொன்று குவித்துள்ளனர்.

இந்தோனேஷியாவின் பபுவா மாகாணத்தில் தனியார் முதலைப்பண்ணை ஒன்று உள்ளது. சமீபத்தில் 45 வயது நபர் தனது மாட்டுக்கு புல் அறுக்க முதலைப்பண்ணை அருகே சென்றுள்ளார். புல் அறுத்துக்கொண்டிருக்கும் போது உடைந்த வேலி வழியாக வெளியே வந்த முதலை ஒன்று குறித்த நபரை அடித்துகொன்று உட்கொண்டுள்ளது.

இதனை அடுத்து, பண்ணை உரிமையாளர் உரிய இழப்பீடு தர வேண்டும் என உயிரிழந்தவரின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் அரசிடம் முறையிட்டனர். உரிய பதில் கிடைக்காததால் ஆத்திரமடைந்த அவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் முதலைப்பண்ணைக்குள் புகுந்து 300 முதலைகளை கொன்று குவித்தனர்.

இது தொடர்பாக பண்ணை உரிமையாளர் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ள நிலையில்,

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!