வீடுகளில் குழந்தை பிரசவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

நாடளாவிய ரீதியில் கடந்த சில நாட்களாக வீடுகளில் குழந்தை பிரசவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரச குடும்ப நல சுகாதார சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் நெருக்கடி, பொருளாதார நெரிக்கடி மற்றும் வைத்தியசாலைகளுக்குச் செல்வதில் ஏற்பட்டுள்ள சிரமம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

இதன்படி, நிக்கவெரட்டி, புறக்கோட்டை மற்றும் முகத்துவாரம் உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் கடந்த இரண்டு நாட்களாக இவ்வாறான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், குடும்ப நல சுகாதார  ஊழியர்களின் உதவியுடன் குழந்தை பிரசவித்ததன் காரணமாக தாய் மற்றும் சேய் நலமுடன் இருப்பதாக அரச குடும்ப நல சுகாதார சேவை சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு மேலும் தெரிவித்துள்ளார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!