எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இராணுவப் பாதுகாப்பு!

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
   
நாட்டில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், பொது மக்கள் தொடர்ந்தும் வரிசைகளில் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ந்தும் முரண்பாடுகள் ஏற்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!