எரிபொருள் விநியோகம் தொடர்பில் லங்கா ஐஓசியின் புதிய அறிவிப்பு

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் ஜூன் 27 ஆம் திகதி பொலிஸ்மா அதிபர் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    
குறித்த மனுவில் , ‘ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளமைக்கமைய குண்டு தாக்குதல்களை தடுப்பதற்கு தவறிய தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள ஒழுக்காற்று நடவடிக்கை யாது?’ என்றும் , அவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கைகள் எவையும் எடு;க்கப்படவில்லை எனில் , விரைவில் அதனை முன்னெடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.

அத்தோடு பேராயர் சிறிது காலத்திற்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் எஞ்சிய 87 தொகுதிகளையும் தமக்கு வழங்குமாறு சபாநாயகர் அலுவலகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும் அதனை வழங்க முடியாது என்று ஜூன் 22 ஆம் திகதி சபாநாயகர் அலுவலகத்தினால் பேராயருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

‘எஞ்சியுள்ள தொகுதிகள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டுக்காக மாத்திரம் பாராளுமன்ற நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளதோடு , அவற்றை பொது மக்களின் உபயோகத்திற்காக வெளியிட முடியாது.’ மற்றும் ‘அவற்றை பகிரங்கப்படுத்துவதானது பாராளுமன்ற வரப்பிரசாதங்களை மீறுவதாகும்.’ என்ற காரணங்களே இதற்காக சபாநாயகர் அலுவலகத்தினால் எம்மிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனவே உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்களின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுகக் வேண்டியவர்களின் அசமந்த போக்கு மிகுந்த வேதனையளிப்பதாக பேராயர் குறிப்பிட்டுள்ளார்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!