தபால் ஊழியர்களின் போராட்டம் – தபால் பொதிகள் தேக்கம் – தபால் திணைக்களம்

கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தின் வெளிநாட்டு பிரிவில் 400 க்கும் மேற்பட்ட தபால் பொதிகள் தேங்கியுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தபால் ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக தபால் திணைக்களத்திற்கு 2 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் தொடர்ந்தும் சேவைக்கு சமூகமளிக்காத பட்சத்தில் அவர்கள் சேவையில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவார்கள் எனவும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் மாத்திரமே தபால் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!