
அவரை அகற்றுவதற்காக இரகசிய திட்டம் தீட்டிக்கொண்டிருப்பவர்கள், தங்களை புடின் கண்டுபிடித்துக் கொல்வதற்கு முன், அவரைத் தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கிறார் Hoffman.
திடீரென ஒருநாள் அது நடக்கும் என்று கூறும் Hoffman, அப்போது புடின் இறந்திருப்பார் என்றும், யாரும் அவரிடம் சென்று, புடின், நீங்கள் பதவி விலகுவீர்களா என்று கேட்டுக்கொண்டிருக்கமாட்டார்கள் என்றும் கூறுகிறார்.
அவர் ஒன்றில் சுத்தியலால் தலையில் அடிக்கப்பட்டுக் கொல்லப்படுவார், அல்லது, நீண்ட கால வியாதியுடையவர்களுக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார், அவர்கள் புடினைத் தலையில் அடித்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பார்கள் என்கிறார் Hoffman.
மேலும், இந்த விடயத்தில் கவனிக்கப்படவேண்டிய முக்கியமான மூன்று பேர், புடினுடைய பாதுகாப்புக் கவுன்சில் தலைவரான Nikolai Patrushev, ரஷ்ய பாதுகாப்பு ஏஜன்சியான FSBயின் தலைவரான Alexander Bortnikov மற்றும் ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சரான Sergei Shoigu என பெயர்களையே வெளிப்படையாகக் கூறிவிட்டார் Hoffman.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!