அரசாங்கத்தை கைப்பற்ற தயாராக உள்ளோம்!

நாங்கள் குறுகிய காலத்திற்கு அரசாங்கத்தை கைப்பற்ற தயாராக உள்ளோம். அடிப்படை பிரச்சினைகளை குறுகிய காலத்தில் தீர்த்து தேர்தலை நடத்தி ஸ்திரமான அரசாங்கத்தை உருவாக்கி சில வருடங்களில் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

  
அரசாங்கத்தின் தவறான தீரமானம் காரணமாக நாடு முழுமையாக முடங்கியுள்ளது. தற்போதுள்ள அரசாங்கங்கள் பின்பற்றும் பொருளாதாரக் கொள்கையுடன் பிணைக்கப்பட்ட அரசியலால் ஒரு நாடு முகங்கொடுக்கக்கூடிய அனைத்து அழிவுகளும் ஒரே நேரத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த அழிவிலிருந்து நாட்டைக் காப்பாற்ற அரசாங்கம் என்ன முடிவுகளை எடுத்தது? ரணில் விக்கிரமசிங்கவிற்கு சர்வதேச தொடர்புகள் இருப்பதாகவும், வெள்ளையர்களை அவருக்கு தெரியும் என்பதால் டொலர்களை கொண்டு வர முடியும் எனவும் தெரிவித்தனர். ஆனால் ரணில் அதிகாரத்திற்கு வந்தவுடன் ராஜபக் ஷர்களையே காப்பாற்றினார்.

மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. மக்கள் பல நாட்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை, பொதுச் சொத்துக்களை ஒரு மோசடி கும்பல் சூறையாடியதால் விவசாயம் அழிந்து விட்டது. எனவே, கொள்ளையடிக்கப்பட்ட பொதுச் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுத்து அவர்களைக் கைது செய்ய வேண்டும். இதை வெறுமனே அரசாங்கத்தை கவிழ்ப்பதன் மூலம் செய்ய முடியாது.

இந்த நாட்டில் அழிவை ஏற்படுத்திய ஊழல்வாதிகள் மற்றும் ஊழல்வாதிகளை தண்டித்து கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை மீளப்பெறும் நோக்கில் மக்கள் வீதியில் இறங்க வேண்டும் என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!