
கடலில் மிக உயரமாக அலை எழும்புகிறது. இதனால் கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து துவங்குவதில் தினமும் தாமதம் ஏற்படுவதுடன் அடிக்கடி நிறுத்தியும் வைக்கப்படுகிறது.சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலையில் புறப்பட்டு சென்ற 350 படகுகள் சிறிது நேரத்திலேயே கரை திரும்பின.
நேற்றும் படகுகள் செல்லவில்லை. சிறிய நாட்டு படகுகள் மற்றும் வள்ளம் கரையில் பாதுகாப்பாக கட்டி போடப்பட்டுள்ளன.காற்றின் வேகம் தொடர்ந்து அதிகமாக உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். சில நாட்களாக மீன்வரத்து இல்லாததால் சந்தைகள் வெறிசோடின. துாத்துக்குடி போன்ற மாவட்டங்களில் இருந்து மீன் வந்தாலும் அது போதுமானதாக இல்லை.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!