வரையறுக்கப்பட்ட தனியார் பேருந்து சேவை! சுமார் 500 பேருந்துகள் சேவை நிறுத்தம்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் பல தனியார் பேருந்துகள் எரிபொருளை பெற்றுக்கொள்வதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு 
உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தினால் சுமார் 500 பேருந்துகள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச குறிப்பிட்டுள்ளார்.

பேருந்து சேவை

எவ்வாறாயினும், ஏனைய பேருந்துகள் வழமை போன்று இயங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!