பல்வேறு துறைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

நாட்டின் பல முக்கிய துறைகள் அத்தியாவசிய சேவைகள் என அறிவிக்கப்பட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது
.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், குறித்த சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி மின்சாரம் வழங்கல் தொடர்பான அனைத்து சேவைகள் உள்ளடங்கலாக – பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் வழங்கல் மற்றும் விநியோகம் – மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்களில் நோயாளர் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பராமரிப்பு, உணவு மற்றும் சிகிச்சை தொடர்பான சேவைகள் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் இவற்றுள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!