ஆட்சியைக் கவிழ்க்க நாமல் முயற்சி!

தற்போதை ஆட்சியை கவிழ்த்து அனைவரும் ஒன்றிணைந்து புதிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முன்வைத்த யோசனையை ஒன்பது பங்காளிக் கட்சிகள் நிராகரித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களின் மூலம் அறியமுடிகிறது.
    
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்காரவுடன் நடத்தப்பட்ட தனியான சந்திப்பில் இந்த யோசனை குறித்து நாமல் எம்.பி தெரிவித்துள்ளார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஒன்பது பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடனான கலந்துரையாடலின் போது வாசுதேவ எம்.பி, கட்சித் தலைவர்களுக்கு நாமலின் யோசனையை அறிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயத்தை அனைத்து கட்சி தலைவர்களும் கடுமையாக நிராகரித்துள்ளதுடன், இந்த நெருக்கடிக்கு ராஜபக்ஷர்களே காரணம் என்பதால் அவர்களுடன் இணைந்து ஆட்சியமைக்க முடியாது என அங்கு தெரிவித்துள்ளனர்.

எனவே, நாமல் எம்.பியுடன் எவ்வித கலந்துரையாடலையும் நடத்துவதில்லை என பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!