பொலிஸ் மா அதிபர் பாதுகாப்புச் செயலாளருக்கு அனுப்பிய கடிதம் வெளியே கசிந்தது எப்படி..!

பொலிஸ் மா அதிபரினால் பாதுகாப்புச் செயலாளருக்கு அனுப்பி வைத்த கடிதம் எவ்வாறு வெளியே கசிந்தது என்பது பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இவ்வாறு பொலிஸ் மா அதிபரினால், பாதுகாப்புச் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
கடிதத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள்

வெளிநாட்டு உளவுப் பிரிவினால் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட உள்ளதாகவும், ஜே.வி.பி மற்றும் முன்னிலை சோசலிச கட்சி என்பனவற்றினால் நாச வேலைகளில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகவும் கிடைக்கப் பெற்ற புலனாய்வுத் தகவல்கள் இவ்வாறு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஜூன் மாதம் 27ம் திகதி இந்தக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான நிலை
இந்த கடிதத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த 4ம் திகதி நாடாளுமன்றில் அம்பலப்படுத்தியிருந்தார்.


புலனாய்வுத் தகவல்களை வழங்கிய பொலிஸ் அதிகாரியின் பெயர் விபரமும் இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதனால் இவ்வாறான ஆவணங்கள் பாதுகாப்பு செயலாளர் அலுவலகத்திலிருந்து வெளியே கசிவது ஆபத்தானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் உயர்மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!