சர்வதேசம் மீது நம்பிக்கை போகவில்லை!

தமிழ் மக்கள் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக வாழும் நிலை ஏற்பட வேண்டும். அந்த நிலையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்தாவிடினும் சர்வதேச சமூகம் ஏற்படுத்தியே தீரும். அந்த நம்பிக்கை இன்னமும் போகவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
    
“தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சிதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இந்நிலையில், கூட்டமைப்பைச் சிதைக்கும் நோக்குடன் விமர்சனங்கள் முன்வைக்கப்படலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தீர்மானத்தின்படி கூட்டமைப்பின் தலைவராக நானே தொடர்ந்தும் பதவி வகிக்கின்றேன்.

கூட்டமைப்புக்குள் இருப்பவர்கள் எவரும் தலைவர் பதவியை சவாலுக்குட்படுத்தி கருத்துக்கள் எதனையும் முன்வைக்கவில்லை. எனது உடல் நிலையில் சிறிய தாக்கம் ஏற்பட்டாலும் நான் இன்னமும் தைரியத்துடன்தான் இருக்கின்றேன்.

தமிழ் மக்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நான் அவதானித்துக்கொண்டுதான் இருக்கின்றேன். அந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வு விடயங்கள் விடயங்கள் தொடர்பில் உள்நாட்டு, வெளிநாட்டு முக்கியஸ்தர்களுடன் கிடைக்கும் சந்தர்ப்பங்களில் பேச்சும் நடத்தி வருகின்றேன்” என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!