கனடா தினத்தன்று 53 வயது நபரால் பெண்ணுக்கு நேர்ந்த கதி!

கனடாவில் இரவு நேரத்தில் சாலையில் நின்றிருந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவமானது Canada Day-வான கடந்த 1ஆம் திகதி நடந்துள்ளது. அன்றைய தினம் ஹலிபக்ஸில் உள்ள பாரிங்டன் சாலையில் இரவு 9 மணிக்கு இளம்பெண்ணொருவர் நின்று கொண்டிருந்தார்.
    
அப்போது முன்பின் அறிமுகமில்லாத நபர் ஒருவர் அங்கு வந்த நிலையில் அப்பெண் மீது கை வைத்து பாலியல் தாக்குதல் நடத்தியிருக்கிறார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட புகார் அளித்த நிலையில் பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து சமீபத்தில் 53 வயது நபர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் நிபந்தனையின் கீழ் விடுவிக்கப்பட்டார். அதே நேரத்தில் வன்கொடுமை குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக ஹாலிபக்ஸ் மாகாண நீதிமன்றத்தில் விரைவில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!