இன்றைய போராட்டங்களுக்கு கூட்டமைப்பும் ஆதரவு!

நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்படும் பூரண ஹர்த்தால் மற்றும் கோட்ட கோ ஹோம் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது பூரணமான ஆதரவினை அளிப்பதாக அறிவித்துள்ளது.

    
இந்தப்போராட்டங்களின் போது வன்முறைகளின்றி ஜனநாயக வழிகளை பின்பற்றுமாறும் போராட்டக்காரர்களிடத்தில் பகிரங்கமான கோரிக்கையை விடுத்துள்ளது.
இதுதொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்தரன் தெரிவித்துள்ளதாவது,

நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் ஏற்படுவதற்கு காரணமாகியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியை விட்டுச் செல்லவேண்டும் என்ற போராட்டக்காரர்களின் நிலைப்பாட்டிலேயே நாமும் உள்ளோம். அத்துடன், அவர் தலைமையிலான ஒட்டுமொத்தமான அரசாங்கமும் முழுமையாக பதவியிலிருந்து வெளியேறி போராட்டக்காரர்களின் ஜனநாயக கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும்.

அந்த வகையில் நாளையதினம் முன்னெடுக்கும் நாடளாவிய ஹர்த்தல் மற்றும் கண்டனப் போராட்டங்களுக்கு எமது தரப்பு முழுமையான ஆதரவினை வழங்கவுள்ளது. அத்துடன்ரூபவ் இந்தக் கண்டனப்போரட்டங்கள் வன்முறைகள் அற்றவகையில் ஜனநாயக

ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டும். போராட்டக்காரர்களின் வெளிப்படுத்தல்களுக்கு எந்தவொருதரப்பினரும் முறையற்ற வகையில் தடைகளை ஏற்படுத்தக்கூடாது என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!