பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கேயின் கூற்றுடன் முரண்படும் மத்திய வங்கி ஆளுநர்

இலங்கை தனது மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் பணவீக்க எண்களை அளவிடுவதில் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரங்களைப் பயன்படுத்துகிறது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டின் பணவீக்க எண்கள் தவறானவை என்ற பொருளாதார நிபுணரும் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான ஸ்டீவ் ஹான்கேயின் கூற்றுகளையும் அவர் மறுத்துள்ளார்.

“தனிநபர்கள் வெவ்வேறு வழிகளில் பணவீக்கத்தை அளவிட முடியும். பேராசிரியர் ஹான்கே பணவீக்கத்தை அளவிடும் முறை பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக நான் நினைக்கவில்லை, ஏனெனில் அவர் பயன்படுத்தும் முறை வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை ” என்று கலாநிதி வீரசிங்க தெரிவித்தார்.


இலங்கையில் வருடாந்த பணவீக்கம் வருடாந்தம் 54.6 வீதம்
“இலங்கை மத்திய வங்கி மே மாதத்திற்கான பணவீக்க எண்களை வெளியிட்டுள்ளது. இலங்கையில் வருடாந்த பணவீக்கம் வருடாந்தம் 54.6 வீதம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

எனினும் இது தவறு. இன்று, வருடாந்தர பணவீக்கத்தை 113.16 வீதம் என்று துல்லியமாக அளவிடுகிறேன்.

இது அதிகாரப்பூர்வ விகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும் என பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கே தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

பணவீக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர, 1884-1950 க்கு இடையில் இருந்ததைப் போன்ற நாணயப் கொள்கையை நிறுவுமாறு இலங்கையை ஹான்கே வலியுறுத்தியுள்ளார்.

ஹங்கேவின் பணவீக்க எண்கள் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை

எவ்வாறாயினும், பேராசிரியர் ஹங்கேவின் பணவீக்க எண்கள் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், இவற்றை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்வது கடினம் என்று கலாநிதி வீரசிங்க கூறினார்.

இதனிடையே, 2022 ஜூன் மாதத்திற்கான தவறான பணவீக்கப் புள்ளிவிவரங்களை பாகிஸ்தானின் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டதாக பேராசிரியர் ஹான்கே குற்றம் சாட்டினார்.

ஏனெனில் உண்மையான பணவீக்க புள்ளிவிவரங்கள் பாகிஸ்தான் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ எண்களை விட இரண்டு மடங்கு அதிகம் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!