முன்னாள் ஜப்பான் பிரதமர் சுட்டுக்கொலை: நடந்தது என்ன?

ஜப்பானின் சிறந்த அரசியல் தலைவர் மற்றும் நீண்ட காலம் பணியாற்றிய முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மர்ம நபரால் ஒருவரால் வெள்ளிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜப்பானின் நாரா பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த ஷின்சோ அபே உள்ளூர் நேரப்படி காலை 11:30 மணியளவில் மர்ம நபர் ஒருவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த நிகழ்வு குறித்து முக்கிய ஐந்து விவரங்கள் இந்த செய்தி தொகுப்பில் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
    
பிரச்சாரமும், துப்பாக்கி சூடும்:
ஜப்பானின் மேற்கு நாரா பகுதியில் உள்ள யமடோ-சைடைஜி ரயில் நிலையத்தின் முன் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் வேட்பாளரான கெய் சாடோவிற்காக ஷின்சோ அபே பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார்.

அப்போது உள்ளூர் நேரப்படி சரியாக 11:30 மணியளவில் மர்ம நபர் ஒருவரால் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுட்டப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து மேடையிலேயே சுருண்டு விழுந்த ஷின்சோ அபேவிற்கு இரத்தப்போக்கு அதிகமாக காணப்பட்டதை தொடர்ந்து உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

துப்பாக்கி சூடு நடத்தியவரை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

ஷின்சோ அபேவின் இறப்பு:
ஷின்சோ அபே சிகிச்சைக்காக நாரா மருத்துவப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு மதியம் 12:20 மணிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அவருக்கு இருதய இயக்கம் மீட்பு சிகிச்சை, மற்றும் சுவாச மீட்பு சிகிச்சைகள் போன்றவை உடனடியாக வழங்கப்பட்டது.

இருப்பினும் ஷின்சோ அபே மாலை 5:03 மணிக்கு இறந்துவிட்டதாக மருத்துவமனையின் பேராசிரியர் ஹிடெடாடா ஃபுகுஷிமா தெரிவித்தார்.

அபேயின் கழுத்தின் வலது பக்கத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டு இருப்பதாக NHK செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கி சூடு நடத்திய நபர் யார்?
ஷின்சோ அபேயின் மீது துப்பாக்கி சுடு நடத்தப்பட்ட பின்னர், டெட்சுயா யமகாமி(41) என்ற நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தன.

டெட்சுயா யமகாமி ஜப்பானின் கடல்சார் சுய-பாதுகாப்புப் படையில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து 2005 ஆம் ஆண்டு சேவையில் இருந்து விலகியுள்ளார்.

பொலிஸார் டெட்சுயா யமகாமி கைது செய்யப்பட்ட பின்னர், முன்னாள் பிரதமர் மீது விரக்தியடைந்ததாகவும், அவரைக் கொல்லும் நோக்கத்துடன் அபேவை குறிவைத்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்து இருப்பதாக NHK செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தலைவர்கள் கண்டனம்:
இந்த தாக்குதல் உள்நாட்டு மற்றும் சர்வதேச சீற்றத்தை தூண்டியுள்ளது, இதனை முற்றிலும் மன்னிக்க முடியாதது என ஜப்பானின் தற்போதைய பிரதமர் கிஷிடா கண்டனம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில், உலக தலைவர்கள் விரைவாக தங்களது வருத்தத்தை வழங்கினர் மற்றும் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். நேட்டோ தலைவர் கொடூரமான தாக்குதலைக் கண்டனம் செய்தார் மற்றும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த தாக்குதலை கேட்டு திகைப்படைந்ததாகவும் தற்போது வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் அபேவின் பிரபலம் எத்தகையது:
அபே ஜப்பானின் சிறந்த அரசியல்வாதி, அத்துடன் மற்ற தலைவர்களை விட நீண்ட காலம் பிரதமராக பணியாற்றியவர்.

ஜப்பானின் போருக்குப் பிந்தைய காலத்தில், 2006 ஆம் ஆண்டில், 52 வயதில் முதல் முறையாக பதவியேற்றபோது அவர் ஜப்பானின் இளைய பிரதமராக கருதப்பட்டார்.
அபே அபெனோமிக்ஸ் என்று அழைக்கப்படும் அவரது பொருளாதாரக் கொள்கைக்காக பரவலாக அறியப்பட்டார்.

அக்கி அபே எல்ஜிபிடி உரிமைகள் உட்பட சில தாராளவாத காரணங்களுக்கு ஊடக ஆர்வமுள்ள ஆதரவாளராக அறியப்பட்டார், மேலும் இவர் பணக்கார குடும்பத்தை சேர்ந்த அகி அபேவை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!