பொலிஸ் ஊரடங்குச் சட்டம் கோழைத்தனமான செயல் – மைத்திரி ஆதங்கம்

நிராயுதபாணியான அமைதிப் போராட்டத்திற்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமை கோழைத்தனமான செயல் எனவும், மக்கள் அச்சமின்றி போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நிராயுதபாணியான அமைதிப் போராட்டத்திற்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் விதிப்பது கோழைத்தனமான செயல்.

ஜனநாயகத்தைப் போற்றும், மனித சுதந்திரத்தை ஏற்றுக்கொள்ளும் நாட்டில், ஒவ்வொரு குடிமகனுக்கும் சுதந்திரமான கருத்துக்களுக்கு உரிமையும், இந்த நாட்டின் அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க போராட்டம் செய்வதற்கும் உரிமை உள்ளது.

மக்கள் அச்சமின்றி திரள்வார்கள்

எனவே, சுதந்திரமான மற்றும் அமைதியான நிராயுதபாணியான மக்களின் போராட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனநாயக உரிமையை எப்போதும் ஏற்றுக்கொண்டவர் என்ற வகையில், இது அரசாங்கத்தின் கோழைத்தனமான செயலாக நான் அறிவிக்கிறேன்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான குரலை நசுக்க இடமளிக்காமல் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான அகிம்சைப் போராட்டத்திற்கு இன்று மக்கள் அச்சமின்றி திரள்வார்கள் என நான் நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!