ஜனாதிபதி,பிரதமர் பதவி விலக வேண்டும்- கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு

ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
    
அந்த வகையில், அரசியலமைப்பின் படி தற்காலிக ஜனாதிபதியாக சபாநாயகர் மஹிந்தயாபா அபேவர்தன பதவியேற்பதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக டுவிட்டர் பதிவில் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சபாநாயகர் இல்லத்தில் அவசர கட்சித் தலைவர் கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.

அதில், பிரதமர், அனுரகுமார திஸாநாயக்க மற்றும் எம்.ஏ.சுமந்திரன் உட்பட பல தலைவர்கள் ஜூம் மூலம் கலந்து கொண்டனர்.

எவ்வாறாயினும், பெரும் கோரிக்கைக்கு அமைய பதவி விலகுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுத சபாநாயகர் தீர்மானித்துள்ளார்.

கட்சித தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு இணங்குவதாக ஸ்ரீனாதிபதி தமக்கு அறிவித்திருப்பதாக பிரதமர் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!