கோட்டா கோ கம போராட்டகளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவல் போலியானவை – ஜெனரல் சவேந்திர சில்வா

கோட்டா கோ கம போராட்டகளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான தகவல் போலியானவை – ஜெனரல் சவேந்திர சில்வா

ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் கோட்டா கோ கம போராட்டகளம் மீது தாக்குதல் நடத்தா ராணுவம் தயாராகிவருவதாக மூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதிகளில் ராணுவம் இன்று இரவு தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களை முற்றிலும் நிராகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காலி முகத்திடல் பகுதியில் பெருமளவான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக பரவி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!