நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிரான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வெளியான தகவல்

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு எதிரான பாரிய இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

நிமல் சிறிபால டி சில்வா, அண்மைய மாதங்களில், அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நம்பிக்கைக்குரியவராக மாறியதுடன், சில விடயங்களில் ஆலோசனைகளையும் வழங்கி வந்தார்.
இதற்கு மத்தியில் ஜூலை முதலாம் திகதி ஜப்பானின் தூதர் மிசுகோஷி ஹிடேகியை ஜனாதிபதி ராஜபக்ச மதிய உணவுக்கு அழைத்தபோது, இருவரும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சஜித் பிரேமதாசவின் குற்றச்சாட்ட
அதன் பின்னர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வரும் ஜப்பானின் நிறுவனமான Taisei Corporation எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எதிர்நோக்கும் சிரமங்களையும் தூதுவர்,கோட்டாபயவுக்கு விளக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் Taisei நிறுவனத்திடமே, நிமல் சிறிபால டி சில்வா,லஞ்சம் கோரியதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,குற்றம் சுமத்தியுள்ளார்.
விசாரணையில் இருந்து பெயரை நீக்க முயற்சி…!

இதனை அடுத்து, குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகள் முடியும் வரை, பதவியை இராஜினாமா செய்யுமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வலியுறுத்திய நிலையில் அவர் பதவியில் இருந்து விலகினார்.

எனினும் தனது நண்பர்களிடம் “விசாரணையில் தனது பெயரை நீக்குவதற்காக” தானாகவே இராஜினாமா செய்ததாக நிமல் சிறிபால தெரிவித்து வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!