போராட்டக் குழுவினரின் நிபந்தனைகள்!

கோட்டா – ரணில் பதவி விலகியதை தொடர்ந்து ஸ்தாபிக்கப்படும் இடைக்கால அரசாங்கத்தின் பதவி காலம் நிறைவடைவதற்குள் புதிய அரசியலமைப்பு மக்கள் வாக்கெடுப்புடன் உருவாக்கப்பட வேண்டும். தற்போது கைது செய்யப்பட்டுள்ள போராட்டகாரர்கள், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அரசியல் பழிவாங்கல், கொலை, காணாமலாக்கப்பட்ட விவகாரம் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் விசேட பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து காலி முகத்திடல் போராட்டகாரர்கள் அரசியல் கட்சி தலைவர்கள், உறுப்பினர்களிடம் தமது யோசனைகளை முன்வைத்தனர்.
    
காலி முகத்திடல் போராட்டகாரர்கள் தமது யோசனைகளை முன்வைக்கும் நிகழ்வு கொழும்பில் உள்ள தேசிய வாசிகசாலையில் இடம்பெற்றது.

முன்வைக்கப்பட்ட யோசனைகளாவன, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதுடன்,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சரவை பதவி விலக வேண்டும்.

கோட்டா- ரணில் அரசாங்கம் பதவி விலகியவுடன் மக்களின் போராட்டத்துடன், பொருளாதாரம், சமூக ,அரசியல் நோக்கங்கள் ஆகியவற்றை கருத்திற் கொண்டு இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

இடைக்கால அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்காணிக்கும் வகையில் மக்கள் கவுன்சில் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் குறுகிய மற்றும் நீண்டகால திட்டத்தை செயற்படுத்த வேண்டும்.

எரிபொருள்,எரிவாயு மற்றும் கல்வி,பொது போக்குவரத்து சேவை வினைத்தினறாக்கல், நுண்கடன் மற்றும் விவசாய கடன்கள் இரத்து செய்யப்படுவதுடன்,லீசிங் ,சிறு வியாபார கடன்கள் இரத்து செய்யல் அல்லது மீள் செலுத்தலுக்கான கால அவகாசம் வழங்கல், தற்போது கைது செய்யப்பட்டுள்ள போராட்டகாரர்கள் உட்பட,சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் அரசியல் பழிவாங்களுக்குள்ளாகியுள்ளவர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

அத்துடன் கொலை ,காணாமலாக்கபட்ட விடயங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க விசேட பொறிமுறை தயாரிக்கப்பட வேண்டும்.

கடந்த இரண்டு தசாப்தங்களாக ராஜபக்ஷர்களால் மோசடி செய்யப்பட்ட அரச நிதி முறையான விசாரணைகளுடன் அரசுடமையாக்கப்படுவதுடன், மோசடியாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அரசியல்வாதிகள் முறைகேடான முறையில் சேகரித்துள்ள சொத்துக்கள் கணக்காய்விற்குட்படுத்தப்பட வேண்டும்.

தற்போதைய வரி முறைமை மாற்றியமைக்கப்பட்டு நேர் வரியை அதிகரித்து,நேரில் வரியை குறைக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு சாதகமான முறையில் வரி கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும்.

கோட்டய ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து மக்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும்.

மக்கள் வாக்கெடுப்புடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்,உயிர்வாழும் உரிமை அடிப்படை உரிமையாகவும்,நிறைவேற்றதிகாரம் இரத்து செய்யல்,நீதியான தேர்தல் இடம்பெறும் முறையான பொறிமுறை ஸ்தாபிக்கப்பட வேண்டும்.

மக்களுக்கு பொறுப்புக் கூறாத அரசியல்வாதிகளை மீளழைக்கும் உரிமை உறுதிப்படுத்தும் பொறிமுறை வகுக்கப்பட வேண்டும். சட்டவாக்கத்தில் மக்கள் மக்கள் பிரதிநிதிகளை தவிர்த்து பங்குப்பற்கும் சூழல் ஏற்படுத்த வேண்டும். கல்வி,சுகாதாரம் ஆகிய துறைகளின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.

இனவாதம் ,தேசிய ரீதியிலான அழுத்தங்களை முழுமையாக இல்லதொழித்து சமத்துவத்தை உறுதிப்படுத்துவதற்கும், சகலஇனங்களினதும், மதம், மொழி, பால் மற்றும் ஏனைய கலாசார தனித்துவ அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கு ஏற்புடைய வகையில் அடிப்படை சட்டம் பலப்படுத்தப்பட வேண்டும்.

இடைக்கால அரசாங்கத்தின் அடிப்படை நோக்கங்களாக மேற்குறிப்பிட்ட விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், ஸ்தாபிக்கப்படும் இடைக்கால அரசாங்கம் 12 மாத காலப்பகுதியில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதுடன் நிறைவடைய வேண்டும்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மனோகனேஷன், ஜீவன் தொண்டான், ரஞ்சித் மத்தும பண்டார, துமிந்த திஸாநாயக்க, சாணக்கியன் ராசமாணிக்கம், ஹர்ச டி சில்வா,உட்பட அரசியல் தரப்பினரும்,சிவில் அமைப்பினரும் கலந்துகொண்டனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!