பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்?

பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற அறிவிப்பு, செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி வெளியாக உள்ளது. போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அடுத்த பிரதமரை கன்சர்வேட்டிவ் கட்சி செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி அறிவிக்க உள்ளது.
    
அது தொடர்பாக நடக்கவிருக்கும் முக்கிய விடயங்களாவன:

ஜூலை 12
கன்சர்வேட்டிவ் கட்சிக்கான புதிய தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

ஜூலை 13
அதிகப்படியான வேட்பாளர்கள் நீக்கம். முதல் சுற்று வாக்களிப்பில் வேட்பாளர்களுக்கு 30 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவாவது இருந்தால்தான் அவர்கள் அடுத்த கட்டத்துக்கு முன்னேறமுடியும்.

ஜூலை 21 வரை
கடைசி இரண்டு வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை அடுத்த சுற்று வாக்களிப்புகள் நடைபெறும்.

ஜூலை முதல் செப்டம்பர் வரை
இறுதியாக தேர்தலில் போட்டியிடும் இரண்டு வேட்பாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே தங்களுக்கு ஆதரவு தேடுவார்கள்.

செப்டம்பர் 5
கன்சர்வேட்டிவ் கட்சி தனது புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார் என்பதை அறிவிக்கும். அந்த நபருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கும் என்பதால், அவரே பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் ஆவார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!