கனடாவில் இளம்பெண்ணின் குடும்பத்தாருக்கு நேர்ந்த கொடூரம்!

ஒட்டாவாவில் கத்திக்குத்து தாக்குதலுக்கு தாயார் மற்றும் இளைய சகோதரியை பறிகொடுத்த இளம் பெண் ஒருவர் காயங்களுடன் தப்பிய நிலையில், சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

சம்பவத்தின் போது கொலைகாரனை தடுத்து நிறுத்த பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், குறித்த பெண் இடையில் சிக்கிக்கொண்டுள்ளார். ஒட்டாவாவின் அனோகா தெருவில் அமைந்துள்ள குடியிருப்புக்கு வெளியே கடந்த மாதம் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
    
இதில் 19 வயதேயான கேத்தரின் ரெடி என்பவர் மட்டுமே காயங்களுடன் தப்பியுள்ளார். இவரது தாயார் 50 வயதான ஆன் மேரி, 15 வயது சகோதரி ஜாஸ்மின் ஆகியோர் அண்டை வீட்டில் வசிக்கும் குடும்பத்து இளைஞர் 21 வயதான ஜோசுவா கிரேவ்ஸ் என்பவரால் கொடூரமாக தாக்கி கொல்லப்பட்டனர்.

கேத்தரின் ரெடியை கொல்ல கிரேவ்ஸ் ஆயத்தமான அந்த நொடியில் பொலிசார் சம்பவப்பகுதியில் வந்து சேர்ந்துள்ளனர். இதனையடுத்து, மூன்று அதிகாரிகள் துப்பாக்கியை நீட்டி அந்த இளைஞரிடம் கத்தியை கைவிட கூறியுள்ளனர்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து தப்ப முயன்ற இளைஞரை பொலிசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் கிரேவ்ஸ் கொல்லப்பட, இடையில் சிக்கிக்கொண்ட கேத்தரின் ரெடி, ஏற்கனவே கத்தியால் தாக்கப்பட்டுள்ள நிலையில், துப்பாக்கி குண்டு பாய்ந்து காயங்களுடன் தப்பியுள்ளார்.

இதனையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட அவர், தற்போது சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வழக்கு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கேத்தரின் ரெடியின் சிகிச்சை மற்றும் தாயாரின் இறுதி சடங்குகளுக்காக பொதுமக்கள் 61,000 டொலர்கள் வரையில் நிதியுதவி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

தாயாரை இழந்துள்ள ரெடியின் எதிர்கால கலவி, மற்றும் தேவைகளுக்காக இந்த தொகை உதவும் என்றே அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!