ஜீ.எல்.பீரிஸை பதவியில் இருந்து நீக்க தீர்மானித்துள்ள பொதுஜன பெரமுன

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்க அந்த கட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

புதிய ஜனாதிபதி தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டுக்கு புறம்பாக டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளித்துள்ளமை இதற்கான காரணம் என தெரியவருகிறது.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடக்கும் வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உத்தியோகபூர்வமாக தீர்மானித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!