ஆறு தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை! July 18, 2022 7:04 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest தற்போதைய அரசியல் நிலை குறித்து ஆறு தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் இணைய வழியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ள ஆறு தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நேற்றுக் காலை 11 மணியளவில் இந்த இணைய வழி கலந்துரையாடலில் கலந்துக்கொண்டுள்ளனர்.கடந்த இரு வாரங்களாக தொடர்ச்சியாக தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலை, தமிழ் மக்கள் நிலைப்பாடு , இதை எப்படிக் கையாள்வது என்பது குறித்து இணைய வழியினூடாக பல சந்திப்புகள் நடைபெற்றன.இதையடுத்து நேற்றைய கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர்கள், வரப்போகும் அரச தரப்பு, போராட்ட அமைப்புகள் ஆகியோரிடம் தமிழ் மக்கள் சார்பில் கோரிக்கை ஒன்றை முன்வைப்பதாக தீர்மானிக்கப்பட்டது. அந்த கோரிக்கைள் சம்பந்தமாக தயாரிக்கப்பட்ட வரைபும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.இன்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடி இக் கோரிக்கையை இறுதி செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான சர்வதேச ஆதரவை ஒருங்கமைக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.தமிழ் மக்கள் தமது எதிர்கால அரசியல் இருப்பை தீர்மானிக்க மீண்டும் கிடைத்துள்ள இச்சந்தர்ப்பத்தை தமிழர் தரப்பு ஒருமித்த நிலையில் கையாள்வதானது எமது மக்களுக்கான உறுதியான முக்கிய மாற்றங்களை ஏற்படுத்த வழி அமைக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.இந்நிலையில் எமது மக்கள் நலன் கருதி தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடமும் இம்முயற்சியில் இணைந்து கொள்வதற்கான கோரிக்கை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டது.இதில் கட்சித் தலைவர்கள்,சி.வி.விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகியோர் கலந்து கொண்டனர். பயணம் காரணமாக சித்தார்த்தன் அவர்களால் கலந்துகொள்ள முடியவில்லை. எனினும் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…