சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பதிவுகள் தொடர்பில் விசாரணை: மகிந்த யாப்பா

நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பதிவுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, பொலிஸ் மா அதிபரிடம் எழுத்துமூல முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான மனுக்களை நாளை பெற்றுக்கொள்வதற்கும், புதன்கிழமை வாக்கெடுப்பை நடத்துவதற்கும் நாடாளுமன்றத்தினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் பொலிஸ் மா அதிபருக்கு தெரிவித்துள்ளார்.

தண்டனைக்குரிய குற்றம்
அத்துடன் நாடாளுமன்ற விதிகளின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் முறையற்ற விதத்தில் செல்வாக்கு செலுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். 

ஏற்கனவே கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பி அறிக்கை மூலம் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் உண்மைகளை சமர்ப்பித்துள்ளதுடன், விசாரணைகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!