இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவானார் ரணில்! இறுதி நேரத்தில் மாறிய முடிவு

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அதிக வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய நிலையில், பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார். எனினும், நேற்றைய தினம் வேட்பாளர்கள் தங்களது மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்தநிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் போதே அதிக வாக்குகளை ரணில் பெற்றிருக்கிறார்.

இலங்கை அரசியல் வரலாற்றில், தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி, பிரதமராக நியமிக்கப்பட்டு பதில் ஜனாதிபதியாக பதவியேற்று தற்போது இடைக்கால ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேட்பாளர்கள்
வாக்குகள்
டலஸ் அழகப்பெரும 82

ரணில் விக்ரமசிங்க 134

அநுர குமார திசாநாயக்க 3
செல்லுபடியற்ற வாக்குகள் – 4
வாக்கெடுப்பில் பங்கேற்காத நாடாளுமன்ற உறுப்பினர்கள் – 2

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!