மக்கள் ஆணையைப் பெற தேர்தல்களை நடத்த வேண்டும்!

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்கள் மூலமும் பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்த மக்கள் ஆணை தற்போது இல்லாமலாகி இருக்கின்றது. அதனால் பாராளுமன்ற தேர்தலை நடத்தி விரைவாக மக்கள் கருத்துக்கு இடமளிக்கவேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
    
நாட்டின் தற்போதை நிலை மற்றும் அரசாங்கத்துக்கு இருக்கும் மக்கள ஆணை தொடர்பாக அவரது முகப்புத்தகத்தில் வைத்திருக்கும் பதிவொன்றிலேயே இவ்வாறு தெரிவி்க்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2019 ஜனாதிபதி தேர்தல் மற்றும் 2020 பொதுத் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்கள் மூலமும் அரசாங்கத்துக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்த மக்கள் ஆணை தற்போது இல்லாமலாகி இருக்கின்றது. அதனால் பாராளுமன்ற தேர்தலை விரைவாக நடத்தி புதிய மக்கள் ஆணைக்கு இடமளிக்கவேண்டும்.

ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக தேர்தலை நடத்துவதாக இருந்தால் அதற்கு செலவழிக்க நிறுவனங்கள் இருக்கும். ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.

அதேபோன்று தேர்தல் ஒன்றை நடத்துவதாக இருந்தால் எந்த கொடுப்பனவையும் பெற்றுக்கொள்ளாமல் அந்த பணிகளில் ஈடுபடுவதற்கு தயாராக இருப்பதாக அரச அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

அதன் பிரகாரம் தற்போதுள்ள அரசியல் நிலைமையில் மக்களின் அபிப்பிராயத்தை கண்டறிவதற்கு பொதுத் தேரதல் ஒன்றுக்கு செல்வதே சிறந்த நல்லது. அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுத்தால் தேர்தலுக்கு ஏற்படும் செலவையும் குறைத்துக்கொள்ள முடியும்.என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!