மீள்வதற்கு ஜனாதிபதி வகுக்கும் வியூகம் என்ன?

நாட்டைன் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஜனாதிபதி வகுக்கும் வியூகம் என்ன? நெருக்கடிகளை சமாளிக்க அரசாங்கம் முன்வைக்கும் வேலைத்திட்டம் என்னவென பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
   
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

இன்று புதிய ஜனாதிபதிக்கு பல பெரிய சவால்கள் உள்ளன,இந்நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவது பிரதான விடயங்களாகும். அது இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது.அதற்கான வியூகத் திட்டம் அவரிடம் உள்ளதா என்பது எங்களுக்குத் தெரியவில்லை என்றார்.

அவர் பிரதமராக பதவியேற்று நாட்டில் சீர்திருத்தங்கள் பற்றி பேசினாலும் அதனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. மக்கள் வாழ்வதற்கு அத்தியாவசியமான எரிபொருள், எரிவாயு, மின்சாரம், மருந்து, உரம், உணவு போன்ற மக்கள் தேவைகளை விரைவாக நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கின்றனர் என்றார்.

கடந்த வருடம் ஜூன் மாதம் முதல் இந்த வருடம் ஜூன் மாதம் வரை இலங்கையர்கள் வெளிநாடுகளிலிருந்து அனுப்பும் பணத்தின் அளவு 47 சதவீதமாக குறைந்துள்ளது என்பது வேதனையான விடயம். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் சர்வதேச அங்கிகாரமும் நம்பிக்கையும் ஏற்படவில்லை.வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடம் நம்பிக்கை இன்னும் உருவாகவில்லை.

அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் செலாவணி கையிருப்பை வலுப்படுத்துவது சாத்தியம்.அதைச் செய்வதற்கான சவாலை ஜனாதிபதி எவ்வாறு செயல்படுத்துவார் என்று தெரியவில்லை என தெரிவித்தார்.

எதிர்வரும் நாட்களில் மின்கட்டணம் அதிக சதவீதம் உயரும் என்றும், அதை மக்கள் தாங்க முடியாமல் தவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. ஒரு கிலோ பருப்பு 650 ரூபாய் ,மா 196 ரூபாய் , உருளைக்கிழங்கு ஒரு கிலோ கிராம் 420 ரூபாய் , டின் மீன் 750 ரூபாய். ஒரு முட்டை 50 ரூபாவாக அதிகரித்துள்ளது. இந்நிலைமையை கட்டுப்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளது என்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!