அடுத்த மாத நடுப்பகுதியில் மீண்டும் நெருக்கடி!

கட்டணம் செலுத்தப்பட்ட எரிபொருள் கப்பல்களில் இருந்து, அடுத்த மாத தொடக்கம் வரை எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். எனினும், எதிர்வரும் காலத்துக்கான எரிபொருள் கொள்வனவு தொடர்பில் நிச்சயமற்ற நிலை காணப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
    
மாதாந்தம் எரிபொருளுக்கான செலவு சுமார் 550 மில்லியன் டொலராகும். இதற்கு தேவையான நிதியை இந்தியா அல்லது வேறு நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியேற்படுகிறது. எனினும், தற்போது அவ்வாறான நிதியைப் பெறுவது கடினமானது.

எனினும், அடுத்த மாத நடுப்பகுதி வரை மட்டுமே மக்களுக்கு குறையின்றி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும். ஏதோவொரு வகையில் இந்தியா, சீனா அல்லது வேறு எந்த நாடும் சுமார் ஒரு பில்லியன் டொலரை வழங்கினால் குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு எவ்வித சிக்கலுமின்றி எரிபொருளை வழங்க முடியும். இல்லையெனில் எரிபொருள் நெருக்கடி தொடரலாம்.

ஆனால், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியுதவி கிடைத்தால் இந்தப் பிரச்சினைக்கு ஓரளவுக்கு தீர்வு காண முடியும். சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் ஸ்திர நிலையை எட்டினால் மட்டுமே மற்றைய வெளிநாடுகளும் நிதியுதவி அளிக்கும்.

எவ்வாறாயினும், அவ்வாறான நிபந்தனைகள் இன்றி இந்தியா மட்டுமே நிதியுதவி வழங்குவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!