ஆயுதம் ஏந்தும் நோக்கம் இல்லை!

போராட்டக்காரர்களுக்கு ஆயுதமேந்துவதற்கான எந்தவிதமான நோக்கங்களும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
    
ஜனநாயகரீதியாக தேசிய சபை ஒன்றை அமைக்க வேண்டுமென்பதே போராட்டக்காரர்களின் கோரிக்கையாக உள்ளதாகவும், போராட்டக்காரர்கள் ஜனநாயகரீதியாக செயற்பட்டு வருகிறார்கள். அவர்கள் மிகுந்த புத்திசாலித்தனமாக நடந்துக்கொள்கிறார்கள்.

மார்ச் மாதம் இப்போராட்டத்தை ஆரம்பிக்கும்போது இப்போராட்டத்துக்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஒத்துழைப்பு வழங்கவில்லை. இப்போராட்டத்துக்கு யார் தலைமைத் தாங்குகிறார்கள் என்பது தெரியாதென அவர்கள் கூறினார்கள்.

ஆனால் நானும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுமே இப்போராட்டத்துக்கு ஆதரவை வழங்கியிருந்தோம் என்றார். சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு முன்பாக சர்வக்கட்சி மாநாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கக் கூட்டி அதில் போராட்டக்காரர்களையும் கலந்துக்கொள்ள செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!