முன்பு செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்தேன்: – ரஷ்ய இளைஞரின் அறிவிப்பால் விஞ்ஞானிகள் குழப்பம்

பூமியில் பிறப்பதற்கு முன்பு தான் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்ததாக ரஷ்யாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கூறியுள்ளார். போரிஸ்கா கிப்ரியானோவிச் என்ற வோல்கோகிராடைச் சேர்ந்த 20வயது இளைஞர், பிறந்த சில மாதங்களிலேயே பேசத் தொடங்கிவிட்டதாகவும், இரண்டு வயதிலேயே எழுதப் படிக்க பழகிக் கொண்டதாகவும், கடினமான விஷயங்களை விவாதிக்கும் திறனை சிறுவயதிலேயே பெற்றிருந்ததாகவும் அவருடைய பெற்றோர் கூறுகின்றனர்.

வேற்று கிரகவாசிகள் குறித்தும் அவர் பல வியத்தகு விவரங்களை கூறி வருகிறார். விஞ்ஞானிகள் போரிஸ்காவை வியப்புடன் அணுகி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து போரிஸ்கா கூறுகையில், செவ்வாய்கிரகத்தில் ஏழு அடி உயரமுடைய மனிதர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு 35 வயதுக்குப் பிறகு முதுமை வருவதில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், பூமியில் பிறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் பிறந்து வசித்து வந்தேன்.

அப்போது மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டது. ஆணு ஆயுத போர் நடைபெற்றது. இதனால் அங்கிருந்த அனைத்தும் எரிந்து சாம்பலாகின. இதில் பலர் உயிரிழந்தனர், சிலர் தப்பி பிழைத்தனர். சுவாசிப்பதற்கு கார்பன் டை ஆக்ஸைடு அங்கு உள்ளது. அதுமட்டுமின்றி நீர் இருப்பதாகவும் கூறியுள்ளார். இவர் கூறியதற்கு எந்த ஒரு உறுதியான ஆதாரங்களும் இல்லை. ஆனால் செவ்வாய் கிரகத்தில் நான் வாழ்ந்தபோது ஏற்பட்ட காயம் தான் இது என்று தனது தோளில் உள்ள காயத்தின் தழும்பை அவர் காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: