பாலிவுட்டில் அறிமுகமாகும் ஸ்ரீதேவி மகள்!

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்கும் பட ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்ரீதேவி மகள் ஜான்வியை ஹீரோயினாக்க பல இயக்குனர்கள் முயன்று வந்தனர். தமிழ், தெலுங்கு படங்களிலும் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்தன. ஆனால் பாலிவுட்டில் அவரை அறிமுகப்படுத்தவே ஸ்ரீதேவி விரும்பினார். இந்நிலையில் கரண் ஜோஹர் தயாரிக்கும் இந்தி படத்தில் ஜான்வி அறிமுகம் ஆகிறார்.

மராட்டியில் வௌியான சாய்ரட் படத்தின் ரீமேக் படமிது. இதில் ஹீரோவாக இஷான் அறிமுகம் ஆகிறார். இவர் நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி. சாசங் கேதான் இந்த படத்தை இயக்க உள்ளார். டிசம்பரில் ஷூட்டிங் துவங்குகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: