வோடபோன் ரெட் போஸ்ட்பெயிட்: அதிரடி புதிய சலுகைகள் அறிவிப்பு

ரிலையன்ஸ் ஜியோ அறிவித்த புதிய சலுகைக்கு போட்டியாக வோடபோன் ரெட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோன் நிறுவனம் ரெட் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது. ரெட் டிராவெலர், ரெட் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் சிக்னேச்சர் என மூன்று திட்டங்களிலும் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மற்றும் தேசிய ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இந்த திட்டங்களில் 20 ஜிபி முதல் அதிகபட்சம் 200 ஜிபி டேட்டா மற்றும் டேட்டா ரோல்ஓவர் உள்ளிட்ட சலுகையும் வழங்கப்படுகிறது. ரோல்ஓவர் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் 200 ஜிபி வரை பயன்படுத்தாத டேட்டாவை தங்களது கணக்கில் சேர்க்க முடியும். இதில் சில திட்டங்களுடன் 12 மாதங்களுக்கான நெட்ஃபிளிக்ஸ் சந்தாவும் வழங்கப்படுகிறது.

ரெட் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் சிக்னேச்சர் உள்ளிட்ட திட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு அமெரிக்கா, கனடா, சீனா, ஹாங் காங், தாய்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. ரெட் டிராவலர், ரெட் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் சிக்னேச்சர் உள்ளிட்ட திட்டங்களில் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் 20 சதவிகிதம் வரை சேமிக்க முடியும்.

வோடபோன் ரெட் போஸ்ட்பெயிட் திட்ட சலுகைகள்:

– நெட்ஃபிளிக்ஸ் சேவையை 12 மாதங்களுக்கு பயன்படுத்த முடியும்.
– வோடபோன் பிளே சேவையின் மூலம் இலவச திரைப்படங்கள் மற்றும் நேரலை தொலைகாட்சிகளை பார்க்கும் வசதி
– மேக்ஸ்டர் (MAGZTER) சேவைக்கு இலவச சந்தா

ரெட் ஷீல்டு சேவைக்கு இலவசமாக பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களின் ஸ்மார்ட்போன்களை சேதம் மற்றும் களவு போனால் பாதுகாக்க முடியும்.

புதிய ரெட் போஸ்ட்பெயிட் திட்டங்கள் ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹிமாச்சல பிரேதேசம் தவிர பெரும்பாலான வோடபோன் வட்டாரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: ,