யோகா பயிற்சியை மதத்துடன் சம்பந்தப்படுத்த வேண்டாம்: – பாபா ராம்தேவ் கண்டனம்

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் முஸ்லிம் பெண்மணி ஒருவர் யோகா ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். ஆனால் அவரது வேலைக்கு அப்பகுதி முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மதத்திற்கு எதிரான செயலில் ஈடுபட வேண்டாம் என அந்த பெண்மணிக்கு மிரட்டல் விடுத்தனர். மேலும் நேற்று அவரது வீட்டில் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலுக்கு பாபா ராம்தேவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ராஞ்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாபா ராம்தேவ் யோகாவை மதத்துடன் சம்பந்தப்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் வாழும் இஸ்லாமியர்கள் தினமும் யோகா பயிற்சிகளை செய்து வருகின்றனர்.யோகா பயிற்சி செய்வதால் மனநலம் மற்றும் உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. யோகா பயிற்சியை மதத்துடன் சம்பந்தப்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,