கனவுகள் உண்மையா இறந்தவர்கள் அழைக்கின்றார்களா?

கனவுகள் உண்மையா அல்லது உணர்வா என ஒரு பக்கம் விவாதங்கள் இடம்பெற்று வந்தாலும் ஆன்மீகவாதிகள் அவை உண்மை எனவும் விஞ்ஞானிகள் அவற்றை எம் ஆழ் மனதில் உள்ள உணர்வுகளின் வெளிப்பாடு எனவும் கூறுகின்றனர். இருப்பினும் சிலர் காணும் சில கனவுகள் சில காலங்களின் பின் அவர்களின் வாழ்வில் நிஜமாக நிகழ்வதாகவும் கூறுகின்றனர். கனவுகளில் பல வகை உண்டு. அதில் ஒன்று தான் இறந்தவர்கள் கனவில் வருவது. நமது கனவுகளில் இறந்தவர்கள் வந்தால், அதில் ஏதோ சில செய்திகள் எமக்காக காத்திருக்கும்.

கனவில் இறந்தவர்கள் வருவது ஏன்?

இறந்தவர்கள் நம் பெயர் சொல்லி அழைக்கும் படியான கனவினை வெற்றுக் கனவு என்கிறார்கள். இந்த கனவு வரும் போது உங்களுக்கு வண்ணம் ஏதும் தெரியாது. உங்கள் அருகே அல்லது சுற்றி ஆட்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இறந்தவர்கள் உங்கள் பெயர் சொல்லி அழைக்கும் ஒலி மட்டுமே கேட்கும். இவ்வாறு உங்கள் பெயர் சொல்லி அழைப்பது, அவர்கள் நீங்கள் கடின நேரத்தை எதிர்கொள்ள போகிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் செய்தியாக கூறப்படுகிறது.

நீங்கள் தொடர்ந்து அவர்களது குரலை கேட்டுக் கொண்டே இருப்பது, உங்களுக்கு நற்செய்தி வரப் போகிறது என்பதை வெளிக்காட்டும். உங்கள் குரலை மிக அமைதியான முறையில் அழைப்பது போன்ற கனவு வருவது, நீங்கள் உங்கள் பழைய கால உறவுடன் மீண்டும் சேர வாய்ப்புகள் வருவதை உணர்த்துவது. மிக உயர்ந்த, ஆழமான குரலில் உங்கள் பெயர் சொல்லி அழைப்பது போன்று இருந்தால் நீங்கள் உங்கள் பழைய வாழ்க்கை முறைக்கு திரும்ப போகிறீர்கள் என்பதை உணர்த்துவதாம்.

யாரும் இறக்காத அல்லது இல்லாத கல்லறை, யாரும் இல்லாத இறுதி சடங்கு போன்றவை கனவில் வந்தால், உங்கள் இல்லற வாழ்க்கை அபாயமாக மாற போவதை குறிப்பதாம். கனவில் வரும் இறந்த நபரின் ஆவி ஏதாவது பொருள் அல்லது நபரை சுட்டிக்காட்டுவது அவர்கள் மூலமாக உங்களுக்கு ஏதோ கெட்ட செய்தி வரப் போகிறது என்பதை உணர்த்துவதாம். கனவில் நல்ல ஆவிகள் வருவது உங்கள் தொழில் மற்றும் இல்லறம் சிறக்க போவதை காட்டும் அறிகுறி.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: