சுதந்திரக் கட்சியில் தலைவர், செயலாளர் பதவிகளைக் கேட்கிறது மகிந்த அணி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒன்று சேர்வதற்கு சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியையும் செயலாளர் பதவியையும் கூட்டு எதிர்க் கட்சிக்கு வழங்க வேண்டும் என, மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சி நிபந்தனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுது மஹிந்த தலைமையிலான கூட்டு எதிரணியில் 53 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் இருவருக்கு குறித்த பதவிகளை வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

Tags: , ,