‘இந்த’ ஆண்ட்ராய்டு அப்டேட்டில் ‘அந்த’ பிரச்சனை ஏற்படாது

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் இந்த அப்டேட் செய்யும் போது, நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனை இருக்காது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஸ்மார்ட்போன் செயலிகளை அப்டேட் செய்ய போதுமான மெமரி இல்லாமல் அடிக்கடி மெமரியை கிளியர் செய்யும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஓர் நற்செய்தி. ஸ்மார்ட்போனில் ஏற்படும் மெமரி பிரச்சனையை எதிர்கொள்ள கூகுள் புதிய வழிமுறையை உருவாக்கி வருகிறது.

உயர் ரக ஸ்மார்ட்போன்களில் கணிசமான அளவு மெமரியை காலியாக வைத்திருப்பது ஸ்மார்ட்போனினை சீராக இயங்க வழி செய்யும். 64 ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போன்களில் மெமரி பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புகள் இல்லை என்றாலும் 16 ஜிபி அல்லது 32 ஜிபி மெமரி கொண்ட சாதனங்களில் இது தவி்ரக்க முடியாத பிரச்சனையாக இருந்து வருகிறது.

அந்தவகையில் XDA டெவலப்பர்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவல்களில் ஸ்மார்ட்போன் மெமரியை சீராக வைத்திருக்க தீர்வு கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்த அம்சம் ஆண்ட்ராய்டு 8.0.1 ஓரியோ அப்டேட்டில் வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த அம்சம் சாதனத்தில் மெமரியை ஆக்கிரமித்து கொள்ளும் கேச்சிகளை அழித்து மெமரியை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அம்சம் அக்டோபர் 31-ம் நடைபெற்ற ஆண்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் பிராஜக்ட் ஃபிரேம்வொர்க்கில் அறிவிக்கப்பட்டது என்றும் இந்த அம்சம் ஸ்மார்ட்போனில் மெமரி குறையும் போது தானாக இயங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த அம்சம் குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பின் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தாமல் இருக்கும் செயலியை தரமிறக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் ஸ்மார்ட்போனின் ஃபோர்கிரவுண்டு மற்றும் பேக்கிரவுண்டில் இயங்கிய செயலிகளை பயன்படுத்தப்படும் செயலியாக ஆண்டராய்டு கருதும். ஸ்மார்ட்போனி்ல் உள்ள ஆக்டிவ் செயலிகளும் மெமரியை எடுத்து கொள்ளும் என்பதால் இது நிரந்தரமான தீ்ர்வு கிடையாது.

ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அப்டேட்டில் வழங்கப்படவுள்ள இந்த அம்சம் கூகுள் வரவேற்றிருந்தாலும், இது சீராக இயங்க ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த அம்சத்தை இயக்க வேண்டும் என கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த அம்சத்தை வழங்கும் பட்சத்தில் இது பயனுள்ள ஒன்றாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: