மோடி அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

இந்தியாவின் ஆளும் பா.ஜ.க. அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதற்கான முயற்சியை காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட 12 கட்சிகள் ஆரம்பித்துள்ளன.

இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே காங்கிரஸ் கட்சி இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

பா.ஜ.க. அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருவதற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையிலேயே காங்கிரஸ் கட்சி இந்த நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.

நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு மேலும் சில கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!