எரிபொருள் நெருக்கடிக்கு காரணமான முன்னாள் அமைச்சர்களின் பெயர்களை வெளியிட வேண்டும்! – கம்மன்பில கோரிக்கை

அண்மையில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடிக்கு காரணமான இரு முன்னாள் அமைச்சர்களும் யார் என்பதை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க வெளியிட வேண்டும் என்று, பிவிதுறு ஹெல உறுமயவின் பொதுச்செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியளார் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தார். “கரு ஜயசூரிய, ஏ.எச்.எம்.பௌசீ, சுசில் பிரேமஜயந்த, அநுர யாப்பா, சம்பிக்க ரணவக்க மற்றும் சந்திம வீரக்கொடி ஆகி​யோரே, பெற்றோலியவள முன்னாள் அமைச்சர்களாவர். எனவே, அமைச்சர் அர்ஜுனவால் குற்றஞ்சாட்டப்பட்ட அ​ந்த முன்னாள் அமைச்சர்கள் இருவர் யார் என்பதை, அவர் வெளிப்படுத்தவேண்டும். அவ்வாறு செய்யாவிடின், மிகுதியாக உள்ள நான்கு அமைச்சர்களுக்கும் அவர் அநீதி விளைவிக்கிறார் என்பதே அர்த்தம்.

அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, அவர்களுடைய இரண்டு பெயர்களை மாத்திரம் குறிப்பிடாமல், குறிப்பிட்ட பெயர்களுக்கு உரித்தான அமைச்சர்களுக்கு எதிராக, சட்டபூர்வமான நடவடிக்கையும் எடுத்தல் வேண்டும், அவ்வாறு செய்யாவிட்டால், எதிர்காலத்தில் கொள்ளை நோய்கள் நாட்டுக்குள் பரவிவிடும்” என்று மேலும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,