பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை!

ராஜிவ்காந்தி கொலை தண்டனை கைதி பேரறிவாளனுக்கு நேற்று வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதி பேரறிவாளன் சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி பரோலில் வீட்டிற்கு சென்றார். பின்னர், 2 மாத பரோல் முடிந்து கடந்த 24ம் தேதி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில், சிறுநீரக தொற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பேரறிவாளன் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற மனு அளித்திருந்தார். இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்காக அவர் நேற்று காலை 10 மணியளவில் சிறையில் இருந்து வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ரத்தம், சிறுநீரகம், ஆர்த்தோ பரிசோதனைகள் முடிந்து மீண்டும் 11.30 மணியளவில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Tags: ,