போராட்டக்காரர்களை வேட்டையாடுகிறது அரசாங்கம்!

போராட்டக்காரர்களின் முதுகில் ஏறி ஆட்சியைக் கைப்பற்றிய அரசாங்கம், போராட்டக்காரர்களை வேட்டையாடி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
 
ஜனநாயக ரீதியில் போராட்டங்களை மேற்கொண்டப் போராட்டக்காரர்கள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டால், அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி வீதிக்கு இறங்குவோம் எனவும் சுமந்திரன் எச்சரித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!